Hot Posts

6/recent/ticker-posts

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்சிசி பிரிவில் விமானப்படை பயிற்சி துவக்க ஆய்வு

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்சிசி பிரிவில் விமானப்படை பயிற்சி துவக்க ஆய்வு

குமாரபாளையம். பிப்.21

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக விமான பிரிவு தேசிய மாணவர் படை தோற்றுவிப்பதற்கு அதிகாரிகள் இன்று பள்ளியை பார்வையிட்டனர்.. 
71 ஆண்டுகள் மிகவும் பழமையான பள்ளியில் கடந்த எட்டு வருடங்களாக ராணுவ பிரிவின் சிசி சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து இந்த ஆண்டு விமானப் பிரிவு என்.சி.சி. புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.

  சேலம் 5 வது தமிழ்நாடு விமானப் படை ஸ்கோடன் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த குரூப் கேப்டன் முருகானந்தம் அவர்களின் ஆணையின்படி சார்ஜன்ட் தன்மாய் டாங்கர் மற்றும் கார்போரல் அஸ்லி ஜென்சிலின் ஆகிய இரண்டு அலுவலர்கள் இன்று குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து இவற்றின் வசதிகள் பற்றி பார்வையிட்டனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் வரவேற்றார்கள். பள்ளியின் பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானம் வகுப்பறைகள் ஆவணங்கள் ஆகியவை பார்வையிட்டனர். 71 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில்
1350 மாணவர்களின் நலன் கருதி அவர்களின் உயர்கல்விகாகவும் வேலை வாய்ப்பிற்காகவும் புதிதாக விமானப்படை என்.சி.சி பிரிவுகள் தொடங்கப்படுகிறது.. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பில் சேர்வதற்கும் ராணுவம், காவல்துறை, வனத்துறை, ரயில்வே துறை, விமானப்படை போன்றவற்றில் சேர்வதற்கு 2 முதல் 5 சதவீத இட ஒதுக்கீடுகளும் கிடைக்கப்படும். ஆண்டுதோறும் புதிதாக 50 மாணவர்கள் விமானப்படை பிரிவு என் சி சி யில் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்பதும் இதற்கு முன்னதாக ராணுவப் பிரிவு என் சி சி யில் 50 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி,கவிராஜ் ஆகியோர் உடன் இருந்து ஏற்பாடு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்