Hot Posts

6/recent/ticker-posts

பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு கிடைத்த விடியல் பட்டா எங்கள் கையில்” இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி.

பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு கிடைத்த விடியல் பட்டா எங்கள் கையில்” 
இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் ஸ்ரீ பாலாஜி மஹாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில், ரூ.5.00 கோடி மதிப்பில் 601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார். 

இலவச வீட்டுமனை பட்டா பெற்ற இராசிபுரம் வட்டம், அரமத்தான்பாளையம் பகுதியை சேர்ந்த பயனாளி திருமதி அருள் தேன்மொழி அவர்கள் தெரிவித்ததாவது,


திருமதி தேன்மொழி
 என் பெயர் தேன்மொழி, நாங்கள் இராசிபுரம் அரமத்தான்பாளையத்தில் வசித்து வருகிறோம். என் கணவர் பெயர் செல்வராஜ். அவர் சாக்கு தைக்கும் கூலித்தொழிலாளி. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அவர்கள் பி.டெக் அக்ரி மற்றும் இளநிலை ஆங்கிலம் படித்துள்ளார்கள். எனது முதல் மகள் பெயர் வைஷ்ணவி (24) எனது 2-வது மகள் பெயர் சுவேதா (19) விளையாட்டு துறையின் சாரபில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். கடந்த 50 வருடமாக எங்களுக்கு பட்டா வேண்டி கோரிக்கை வைத்து வந்தோம். நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்கவில்லை. 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பட்டா வேண்டி மனு அளித்தோம். எங்கள் மனுவை பெற்று அரசுத்துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு இன்று வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளார்கள். இந்த பட்டாவை பெற எனது தாய் இன்று உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார். இன்று வழங்கிய பட்டாவை நான் எனது தாய்க்கு சமர்பிக்கிறேன். நாங்கள் இந்த பட்டா பெறுவதற்கு இத்தனை ஆண்டுகளாக எங்களுக்காக பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும், மேலும் இந்த பட்டா வழங்க ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் எனது கண்ணீரை நன்றியாக தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.




இலவச வீட்டுமனை பட்டா பெற்ற இராசிபுரம் வட்டம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பயனாளி திருமதி மகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது,

திருமதி மகேஸ்வரி
நாங்கள் இராசிபுரம், இந்திரா காலனி பகுதியில் வசித்து வருகிறோம். என் கணவர் பெயர் கதிரேசன் கூலித்தொழில் செய்து வருகிறார். எங்கள் மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகள் நர்சிங் பயின்று வருகிறார். நாங்கள் பட்டா இல்லாமல் வசித்து வந்தோம். 47 ஆண்டுகளாக போராடி இப்பொழுது தான் பட்டா வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாங்கள் வழங்கிய கோரிக்கையை ஏற்று, தற்போது பட்டா வழங்கி உள்ளார்கள். இது எங்களின் 47 வருட கனவு. 10 நாட்களில் நனவாகி உள்ளது. பல ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த விடியல் இப்போழுது எங்கள் கைகளில் பட்டாவாக உள்ளது. எங்களது கனவை நனவாக்கி பட்டா வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இலவச வீட்டுமனை பட்டா பெற்ற இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பயனாளி திருமதி மஞ்சுளா அவர்கள் தெரிவித்ததாவது,


திருமதி மஞ்சுளா
என் பெயர் மஞ்சளா. நான் தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு 30 வருடமாக பட்டா இல்லாமல் இருந்து வந்தோம். இதுவரை பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எங்களுக்கு யாரும் பட்டா வழங்கவில்லை. எங்களை இப்பகுதியில் வசிக்க கூடாது என கூறி வந்தனர். நாங்கள் மிகவும் பயந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு எங்கள் பகுதிகளுக்கு அரசு அலுவலர்களை அனுப்பி குறைகளை கேட்க செய்தார்கள். அதில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டுமென மனு அளித்தோம். அதன்படி பட்டா வழங்கி எங்களது பல நாள் கனவை நிறைவேற்றி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்