Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகள் குறித்து 
ஆய்வு மேற்கொண்டார்.
 நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், திருச்செங்கோடு, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (20.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, தற்போது வசித்து வருபவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குடியிருப்பு பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். 
தொடர்ந்து, திருச்செங்கோடு, குமாரமங்கலம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்