க. கனிமொழி M.P யை சந்தித்து மனு அளித்தார்.
உயர்திரு. க.கனிமொழி M.P. அவர்கள்,
கழக துணைச்செயலாளர் 2024-க்கான
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர்
அம்மையீர்,
வணக்கம், தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 36 பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து, தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு (TAAK) என்ற பெயரில் 1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து குறல் கொடுத்து வருகிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து, அறிவாலயத்தில் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களை சந்தித்து தமிழகத்தில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனைகளை குறித்து கோரிக்கை மனுவை அளித்திருந்தோம். கோரிக்கை இதுவரை நிறைவேற்றபடவில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்ததில் ஆவது எங்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்து நிறைவேற்றபடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் உங்களுடைய மேலாண கவனத்திற்கு தமிழக அளவில் உள்ள பழங்குடியின மக்களின் சார்பாக இந்த கோரிக்கையை உங்கள் மன் சமர்ப்பிக்கின்றேன்.
கோரிக்கைகள்
1. கொல்லிமலையில் உற்பத்தி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த கொல்லிமயை மிளகிற்கு போதிய விலை கிடைக்கவில்லை, மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகிற்கு வரியை உயர்த்தி கொல்லிமலையின் மிளகிற்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. கொல்லிமலையில் உற்பத்தி செய்யப்படும் மிளகினை கொல்லிமலையிலேயே ஓர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி தர வேண்டும்.
3. வனநில உரிமை சட்டம் 2006-ன் படி வனங்களை சார்ந்து வாழ்வோருக்கு 10 ஏக்கர் நிலமும் நிலமற்ற தரை பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு 2 நிலமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மலைப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் மக்களுக்கு பட்டா வழங்குவதை தடை செய்யும் GO 1168/வடது நாள் : 25.07.1989 ஐ திரும்பப் பெற்று மீண்டும் பழங்குடியின மக்களுக்கே பட்டா ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. பஞ்சாயத்து அமைப்புகளில் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப 1.05 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
6. தமிழகத்தில் பழங்குடியின மக்களின் நிலங்களை பழங்குடியினர் அல்லாதோர் வாங்குவதையும், விற்பதையும் மற்ற மாநிலங்களை போல தடை செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்.
7. வனச்சட்டத்தை முறையாக அமுல்படுத்த துவங்கும் காலம் வரையிலும் எந்த காரணத்தின் பெயரிலும் வன நிலங்களில் இருந்து பழங்குடியின மக்களை அப்புற படுத்தவோ, வழக்கு தொடுக்கவோ முழுமையாக தடுக்கப்பட வேண்டும்.
8. மத்திய அரசால் இயற்றப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களை சார்ந்து வாழ்பவர்கள் (வன உரிமை அங்கீகாரம்) சட்டம் 2006-ஐ தமிழகத்தில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
9. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் பல பஞ்சாயத்துகள், ஒன்றியங்களில் வாழுமிடங்களை பிரித்து வைத்திருப்பதை அரசு எல்லை மறுவரையரை செய்து பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை 5 வது அட்டவணைப் பகுதியாக அறிக்க வேண்டும்
10.தரை பகுதியில் வாழும் இருளர் இன பழங்குடியினர்களின் உரிமை நிலை நாட்ட மாதிரி கிராமங்களை 500 குடும்பங்களோடு உருவாக வேண்டும்.
11.தரை பருதியில் வாழும் இருளர் பழங்குடியின பக்களுக்கு வீட்டுவனையும், வீடும் உத்தரவாதப்படுத்த பட வேண்டும்.
12 தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு மூன்று சட்டமன்ற தொகுதியும், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் ஒதுக்க வேண்டும்.
13. மத்திய அரசு பழங்குடியின மக்களுக்காக பல்கலைக்கழகம் ஒன்றை மத்திய பிரதேசம் போய் தமிழகத்திலும் அமைக்க வேண்டும்.
14.பழங்குடியின மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் 1979-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்புக் உட்கூறு (SCP) நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க ஆந்திர போல் தனி சட்டம் கொண்டுவர வேண்டும்.
15.பழங்குடியின மக்கள் செயல்படும் உண்டு உறைவிட பள்ளி, அரசுப்பள்ளி அனைத்திலும் ஆசிரியர் வருகை, பள்ளி திறப்பு, இலவச தரமான கல்வி அமைப்புகளின் நிர்வாகத்தினை பழங்குடியின மக்களிடமே வழங்கப்பட வேண்டும்.
16.கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களின் 1989-ம் ஆண்டு மறு நில அளவையின் போது சரியான அளவை செய்யப்படாத காரணத்தினால் அதிக குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு முறை முறையான மறு நில அளவை செய்திட வேண்டும்.
17.வன உரிமைச்சட்டம் 2006-ன் படி தமிழகத்தில் உள்ள வன கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும்.
18.புலையர் இன மக்களை தமிழகத்தில் மீண்டும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும்.
19.கொல்லிமலையில் சட்ட விரோதமாக PACL கம்பெனியால் பதிவு செய்யப்பட்ட நில பத்திரம் பதிவுகளை ரத்து செய்து பழங்குடி மக்களின் நிலங்களை மீட்டு தர வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனம் கூர்ந்து தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்து செயல்படுத்தும் கட்சிக்கு தமிழக பழங்குடியா மக்களின் வாக்குகளை செலுத்துவோம் என தமிழக பழங்குடியின மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
0 கருத்துகள்