Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 
தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 131 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2024) தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 131 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம், உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பசியினை போக்கிட காலை உணவுத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” மற்றும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திட்டங்களின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 


நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மே - 2021 முதல் 15,000 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாரைகிணறு பகுதி வாழ் மக்களின் 100 ஆண்டு கால கனவை நிறைவேற்றிடும் வகையில், ரூ.32.84 கோடி மதிப்பீட்டில் 814 நபர்களுக்கு 723 பட்டாக்களை வழங்கபட்டுள்ளது. மேலும் திருச்செங்கோடு பகுதியில் ரூ.2.91 கோடி மதிப்பில் 272 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுபேற்ற பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 80 பயனாளிகளுக்கு ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்களையும், 24 பயனாளிகளுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தம் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 131 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்