Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 40 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

    
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 
ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 
40 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பட்டணம் பேரூராட்சியில் இன்று (13.3.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

பட்டணம் பேரூராட்சி, வார்டு எண் 2, களரம்பள்ளி தெருவில் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, தலா ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-2, நேருநகர், வார்டு எண்-4, காந்திநகர் மற்றும் வார்டு எண்-13 மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்த, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-2, களரம்பள்ளி கிரிவலப்பாதையில் மின்கம்பத்துடன் கூடிய 33 தெரு மின்விளக்குகள் அமைக்கும் பணி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் போதமலை குட்டையினை மேம்பாடு செய்யும் பணி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலதன திட்டத்தின் கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-13 மேட்டாங்காட்டில் புதியதாக நூலகம் கட்டும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-15, குச்சிக்காடு பகுதியில் புதியதாக பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, வார்டு எண்-9, பெரிய ஏரி வயக்காடு பகுதியில் ரூ.3.80 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் தரைபாலம் அமைக்கும் பணி என மொத்தம் 1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து, இராசிபுரம் வட்டம், கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்.
 மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், உயர்கல்வி பயில மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக ரூ.4,000/-, சாலை வசதிகளை மேம்படுத்திட முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்திடும் வகையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சுகாதாரம், கல்வி, மருத்துவம், பேருந்து வசதி, சாலை வசதி என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள். 
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய விளிம்புநிலை பொதுமக்கள் பயனடைந்திட, பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறும், “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். 
இப்பகுதி மக்கள் எங்களிடம் வீட்டுமனை பட்டா வேண்டி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் 40 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் இராசிபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப உரிமை நிதியிலிருந்து தலா ரூ.38,500/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Adjustable cot with air Bed) வழங்கப்பட்டுள்ள இராசிபுரம் வட்டம், கார்கூடல்பட்டி, பிலிப்பாகுட்டையில் மாற்றுத்திறனாளி திரு.ச.ஈஸ்வரன் மற்றும் முள்ளுக்குறிச்சியில் திரு.செ.தாரேஷ் ஆகியோர்களின் இல்லங்களுக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தனது சொந்த நிதிலிருந்து தலா ரூ.50,000/-ம், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தலா ரூ.50,000/- ம் என மொத்தம் ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.2.00 இலட்சம் உதவித்தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.இராமசுவாமி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், பட்டணம் பேரூராட்சி தலைவர் திரு.பொன்நல்லதம்பி, பேரூராட்சி உதவி செயற்பொறாளர் திரு.கே.பழனி, இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்