விபத்துகளில் பெற்றோரை இழந்த 14 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.75,000/- வீதம்
ரூ.10.50 இலட்சத்திற்கான இட்டுவைப்பு பத்திரங்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11.3.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், விபத்துகளில் பெற்றோரை இழந்த
14 துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவியாக தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.10.50 இலட்சத்திற்கான இட்டுவைப்பு பத்திரங்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளில் தாய் அல்லது தந்தையை இழந்த மற்றும் நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 14 நபர்களுக்கு தலா ரூ.75,000-க்கான இட்டுவைப்பு பத்திரம் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
0 கருத்துகள்