Hot Posts

6/recent/ticker-posts

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 148 பயனாளிகளுக்குரூ.30.56 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
 சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 148 பயனாளிகளுக்கு
ரூ.30.56 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11.3.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், 148 பயனாளிகளுக்கு ரூ.30.56 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் முன்னேற சுய தொழில் தொடங்கிட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 16,100 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகைத்திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் பெண்கள் மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அரசின் அனைத்து திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழாவில் 117 மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.17.55 இலட்சம் கடனுதவி, 12 மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.2.40 இலட்சம் கடனுதவி, 9 பயனாளிகளுக்கு ரூ.61,200/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் 10 நபர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு (டாம்கோ) திட்டம் சார்பில், 10 நபர்களுக்கு ரூ.10.00 இலட்சம் கடனுதவி என மொத்தம் 148 நபர்களுக்கு ரூ.30.56 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்