நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.3.2024) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 10,335 மாணவர்களும் 9,697 மாணவியர்களும் என மொத்தம் 20,032 மாணவ/ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை எட்டு தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில் 334 மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநிலைப் பொதுத்தேர்வுக்கு 92 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 140 பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள் 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 6 மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் 1,295 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு மையங்களை பார்வையிட மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மற்றும் மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைத்து தேர்வு மையங்களை பார்வையிட உள்ளனர்.
இந்த ஆய்வுகளில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்