Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.  

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற பொது தேர்தல் –2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம் பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் வாக்களிப்பேன் எனும் வாக்களார் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார். 
தொடர்ந்து, நாட்டிற்கான எனது முதல் வாக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட் பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர்.பார்த்தீபன், நாமக்கல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன், நகராட்சி ஆணையாளர் திரு.சென்னு கிருஷ்ணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்