Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற 
தேர்தல் – 2024 முன்னிட்டு அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் –2024 முன்னிட்டு அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
நாமக்கல் மாவட்டத்தில் திருமண மண்டப மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நடத்தை விதிகள் :
1. தங்கும் விடுதிகளில் கும்பலாக வெளியூர்களிலிருந்து வரும் நபர்களை தங்க வைக்கக் கூடாது.
2. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் வெளியூர்களிலிருந்து வரும் சந்தேகமான நபர்களை எந்தக் காரணம் கொண்டும் தங்க வைக்கக் கூடாது.
3. விடுதிகளில் தங்கும் நபர்களின் பெயர்கள், முகவரி, தொழில், தொலைபேசி எண் அடங்கிய விபரங்கள் உரிய பதிவேடுகளில் சரியாக பதிவு செய்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும்.
4. மக்கள் பிரதிநதித்துவச் சட்டம் 1951 பிரிவு 123ன் கீழ் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக எவ்வித பரிசு பொருட்களையோ, (உதாரணமாக வேட்டி, சேலை மற்றும் இதரப் பொருட்கள்) மற்றும் உணவுகளையோ கூட்ட அரங்குகளில் (Conference Hall) சேமித்து வைக்கவோ வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
5. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 123ன் கீழ் வழிபாட்டு தலங்களை தவிர இதர இடங்களில் அன்னதானம் வழங்கப்படக்கூடாது. எனவே, கூட்ட அரங்குகளில் (Conference Hall) வாக்காளர்களை கவரும் வகையில் அன்னதானம் வழங்குவதை அனுமதிக்க கூடாது.
6. தேர்தல் முடியும் வரை கூட்ட அரங்குகளில் (Conference Hall) எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற விபரம் முன்கூட்டியே மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
7. இதனால் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் காவல் துறைக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நடத்தை விதிகள்:
1. அச்சக உரிமையாளர்கள் துண்டு பிரசுரங்கள் அச்சிடும்போது அச்சக உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி விபரங்களை தவறாமல் அச்சிட வேண்டும்.
2. அச்சக உரிமையாளர்கள் வன்முறையை தூண்டும் வகையிலோ, தனியரை தாக்கும் வகையிலோ துண்டு பிரசுரகள் அச்சிடக் கூடாது.
3. அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்கள் மற்றும் இதர இனங்களில் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விபரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டியது. இது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட இரசீதுகளின் பிரதியையும் பராமரிக்க வேண்டும்.
4. அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்கள் மற்றும் இதர இனங்கள் வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னர் அல்லது அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அச்சிடப்பட வேண்டும். தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 H இன் கீழ் அச்சிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. தனி நபர்களை இழிவுபடுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ந.சிவக்குமார் (தேர்தல்கள்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் விடுதி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்