மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில்
மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் இன்று (19.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் –2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் வாக்களிப்பேன் எனும் வாக்களார் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாட்டிற்கான எனது முதல் வாக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட் பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து, தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கினார். மேலும், பேருந்துகளில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் நாள் ஏப்ரல் 19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 105 வயதுடைய திருமதி.ரா.செட்டியம்மாள் அவர்களை நேரில் சந்தித்து ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுவது குறித்தும், தேர்தலில் மூத்த குடிமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்து தபால் வாக்களிக்க 12D படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.சே.சுகந்தி, திருச்செங்கோடு வட்டாட்சியர் திரு.விஜயகாந்த், மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் திரு.இரா.சேகர் ஆகியோர் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்