மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மக்களவைத் தேர்தல் -2024-முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு,
6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நாளான 19.4.2024 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 347 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 244 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 424 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,374 அலுவலர்கள், 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 344 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 259 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 313 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,192 அலுவலர்கள், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 407 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 350 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 634 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 390 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,781 அலுவலர்கள், 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 238 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 296 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 248 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,062 அலுவலர்கள், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 365 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 411 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 314 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 341 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,431 அலுவலர்கள், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 264 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 207 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 238 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 976 அலுவலர்கள் என மொத்தம் 1,954 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 1,954 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 1,954 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 1,954 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 7,816 அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து, இன்று (24.3.2024) நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள், 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இராசிபுரம், எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு அக்கியம்பட்டி, வேதலோகா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு பரமத்தி வேலூர், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு தோக்கவாடி கே.எஸ்.ஆர் கல்லூரி, 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மக்களவை தேர்தல் 2024-ஐ சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு.ஆர்.பார்தீபன் (நாமக்கல்), திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), திரு.ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), திரு.த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), திரு.ச.பாலாகிருஷ்ணன் (பரமத்தி), திரு.வே.முருகன் (குமாரபாளையம்), முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி உட்பட கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (வட்டாட்சியர்கள்) கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்