Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 
பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் நகராட்சியில் இன்று (19.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் –2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் வாக்களிப்பேன் எனும் வாக்களார் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து, தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கினார். மேலும், பேருந்துகளில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேர்தல் நாள் ஏப்ரல் 19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியாய விலைக்கடைகளில் பொது விநியோக பொருட்களின் மீது தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு மேற்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளார்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்