Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 
ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும்  
9 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அரிமா சங்கம் மண்டபத்தில் இன்று (9.3.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், ரூ.2.45 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.3.15 இலட்சம் மதிப்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைப்பட்ட கட்டில் (Adjustable cot with air Bed) என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தாவது,
 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கினார்கள். அந்த வழியில் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, கைபெண்களுக்கு உதவித்தொகைத்திட்டம், திருமணம் ஆகாத 50 வயது கடந்த பெண்களுக்கு உதவித்தொகைத்திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். 

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதமலை மக்களின் கோரிக்கை ஏற்று ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு போதமலைக்கு சாலை அமைக்கும் பணி, இராசிபுரத்திற்கு ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்கள். மேலும், பட்டா பெறுவதில் பொதுமக்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்கிட நத்தம் பட்டாக்களையும் இணைய வழியில் கொண்டுவந்துள்ளார்கள். மேலும், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களை நேரடியாக அணுகி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், 13 துறைகளை உள்ளடக்கி மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் செய்தாக பல்வேறு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய தினம் உலக மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்கு வந்துள்ள அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

 இன்றைய தினம் 253 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 16,250 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இராசிபுரத்திற்கு மட்டும் 3500 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிள்ளாநல்லூரில் மாற்றுத்திறனாளி திரு.விக்னேஷ் அவர்களின் இல்லத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.38,500/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டில் (Adjustable cot with air Bed) மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50,000/- உதவித்தொகையினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.ஆர்.எம்.துரைசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு. ச.பிரபாகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர்.பார்த்தீபன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்