Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 250 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 250 தூய்மை பணியாளர்களுக்கு 
பரிசுகள் வழங்கி, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். மேலும் பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா. -ஆல் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், வெள்ளைபிள்ளையார் கோயில், எஸ்.பி.எஸ்.மஹாலில் இன்று (08.03.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வெண்ணந்தூர், அத்தனூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட தூய்மை காவலர்கள், பணியாளர்கள் கலந்து கொள்ளும் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்கள், 19 பேரூராட்சிகளில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து தூய்மை பணி மேற்கொண்டு வரும் தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 250 தூய்மை காவலர்கள், பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, 250 தூய்மை காவலர்கள், பணியாளர்களுக்கு சமபந்தி ஏற்பாடு செய்யப்பட்டு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் உணவினை பரிமாறினார். 

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் திரு.இராஜேஷ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் (வெண்ணந்தூர்) திரு.ஆர்.எம்.துரைசாமி உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்