ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் 1 புதிய பணிக்கு அடிக்கல் நாட்டி,
1 முடிவுற்ற திட்டப்பணியினை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், வேலூர் பேரூராட்சி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரையாத்தூர் ஊராட்சி, ஜேடர்பாளையத்தில் இன்று (05.03.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் 1 புதிய பணிக்கு அடிக்கல் நாட்டி, 1 முடிவுற்ற திட்டப்பணியினை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், வேலூர் பேரூராட்சி, படமுமடிபாளையம்,
வார்டு எண் 1-ல் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 1 படமுமடிபாளையம் NH 44 முதல் ஆரியூரான் தோட்டம் வரை மற்றும் தங்காயி கோயில் வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.49.99 இலட்சம் மதிப்பீட்டில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரையாத்தூர் ஊராட்சி, ஜேடர்பாளையத்தில் சந்தையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் திருமதி எம்.லட்சுமி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சண்முகம், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.சு.வடிவேல் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்