Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள கொசவம்பட்டி ஏரி நடைபாதையை திறந்து வைத்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் 
கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், 
ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள கொசவம்பட்டி ஏரி நடைபாதையை திறந்து வைத்தார்.
நாமக்கல் நகராட்சி, சேந்தமங்கலம் சாலையில் இன்று (14.3.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் முன்னிலையில், கொசவம்பட்டி ஏரி ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள கொசவம்பட்டி ஏரி நடைபாதையை திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் நகராட்சிக்கு வரலாறு காணாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டங்களில் மணிமகுடமாக திகழ்வது நாமக்கல் புறவழிச்சாலை. நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், எளிதான போக்குவரத்திற்கு வித்திடும் வகையிலும் ரூ.194 கோடி மதிப்பில் 4 கட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. 

 மேலும், நாமக்கல் நகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.313.00 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக நாமக்கல் நகராட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கவுள்ளார்கள். அவ்வாறு மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பட்சத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் இன்றைய தினம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் கொசம்பட்டி ஏரி புனரமைக்கப்பட்டு கரையை பலப்படுத்தி கம்பி வேலி அமைத்து நவீன படுத்தப்பட்டுள்ளது.

 நகராட்சி நிர்வாகம் அழகுற அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரியின் நடைபாதையினை பொதுமக்கள் தொடர்ந்து நடைபயிற்சிக்கு பயன்படுத்திடும் வகையில் வாக்கர்ஸ் கிளப் அமைத்து பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் சிறுதானிய உணவுகளை வழங்கிடும் வகையில் சிற்றுண்டியகம் அமைத்திட வேண்டும். ஏரி கரை பலப்படுத்தப்பட்டுள்ளதால் நீர் ஆதாரத்தை கண்டறிந்து நீர் தேக்கத்திற்கான வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். தேவையான வழிகாட்டி அறிவிப்பு பலகைகளை அமைத்து நகராட்சி நிர்வாகம் முறையாக பாராமரிக்க வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, நகராட்சி ஆணையாளர் திரு.சென்னு கிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்