ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் இன்று (03.03.2024) ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டடத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர்
மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார். மேலும், 3 நகர்புற பேருந்துகள் மற்றும் 2 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் புதிய போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழாவும், புதிய வழித்தட பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி என இரண்டு நிகழ்ச்சிகள் இணைந்து சிறப்பாக நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநில நிதியிலிருந்து 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டு, முதற்கட்டமாக தற்போது 250 க்கும் மேற்பட்ட பேருந்துகளை செயல்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் பழைய பேருந்துகளை புதிய பேருந்துகளாக மாற்றி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், நாமக்கல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின்படி, வேலூர்-பொன்மலர்பாளையம் வழித்தடத்திற்கு 1 நகர்புற பேருந்து, இராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டகளுர் கேட், பாச்சல் பிரிவு நத்தமேடு சிங்காளந்தபுரம் வழித்தடத்திற்கு 1 நகர்புற பேருந்துகள் என 2 நகர்புற பேருந்துகளும், இராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம் கோவை வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து, மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல், துறையூர், விழுப்புரம் கிளாம்பாக்கம் வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து, நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், சிதம்பரம் மயிலாடுதுறை வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து என 3 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 5 புதிய வழித்தட பேருந்துகளை இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் வங்கி நிதியுதவியோடு 2200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் 15 வருடங்களாக உள்ள பேருந்துகளுக்கு மாற்றாக எட்டு மாத காலத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளது. லாரி உரியைமயாளர் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை நிறைவேற்ற உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது. மேலும், சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து ஓட்டுநர்கள் விபத்து ஏற்படாமல் பேருந்து இயக்குவதற்கு ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் 25 வருடம் விபத்து இல்லாமல் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு தங்க நாணயமும், 10 வருடம் விபத்து இல்லாமல் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1.00 இலட்சத்திலிருந்து ரூ.2.00 இலட்சமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்கள். தொடர்ந்து, பின்பற்றி விபத்து இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர்
மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் கட்டடங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கொண்டு வந்துள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வருடம் 572 சாலை விபத்துகளினால் இறந்துள்ளார்கள். இதில் 67 சதவீதம் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், 4 சதவீதம் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட அணியாத காரணத்தினால் இறந்துள்ளார்கள். இந்த சாலை விபத்துகளில் 42 சதவீதம் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஏற்பட்டுள்ளது. இதில் 37 வயது முதல் 60 வயது வரை 45 சதவீதம் நபர்கள் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்கள். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் பொழுது அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இருசக்கர வாகனங்களை இயக்கி காட்ட இருசக்கர வாகனங்கள் இல்லாத நபர்கள் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பெற்று வருகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வரும் நபர்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்பாடமல் இருக்க 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய வாகனங்களை கொடுத்துள்ளார்கள். மேலும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய வட்டார அலுவலகம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசிற்கும், போக்குவரத்து அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம் மண்டலம்) சார்பில் வேலூர்-பொன்மலர்பாளையம் வழித்தடத்திற்கு 1 நகர்புற பேருந்து, இராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டகளுர் கேட், பாச்சல் பிரிவு நத்தமேடு சிங்காளந்தபுரம் வழித்தடத்திற்கு 1 நகர்புற பேருந்துகள் என 2 நகர்புற பேருந்துகளும், இராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம் கோவை வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து, மோகனூரிலிருந்து நாமக்கல், துறையூர், விழுப்புரம் கிளாம்பாக்கம் வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து, நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், சிதம்பரம் மயிலாடுதுறை வழித்தடத்திற்கு 1 புறநகர் பேருந்து என 3 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 5 புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் திரு.து.கலாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் திரு.மு.செந்தில்குமார், அட்மா குழுத்தலைவர் (நாமக்கல்) திரு.வி.கே.பழனிவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) நிர்வாக இயக்குநர் திரு.ஆர்.பொன்முடி, துணை போக்குவரத்து ஆணையர் (ஈரோடு சரகம்) திரு.பெ.சுரேஷ், நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆ.கா.முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்