பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் தங்கள் பங்கினை ஆற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று (08.03.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டு, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கல்லூரி மாணவியர்களுக்கு மகளிர் தின வாழ்த்து மடலை வழங்கி, 43 பயனாளிகளுக்கு ரூ.21.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவரது வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெண்களின் முன்னேற்றத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித ஒதுக்கீடு, அரசு வேலைகளில் 33 சதவிகித ஒதுக்கீடு வழங்கி பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி மோகனூர் வட்டம், காளியம்மன் கோவில் தெருவில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த திரு.தங்கபாண்டியன் அவர்களின் மகன் மற்றும் மகள் நலனை காத்திட பேட்டபாளையத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வள்ளிபுரத்தில் மிகவும் எளிய நிலையில் மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வந்த 70 வயதுமிக்க தந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டு, அவர்கள் குடியிருந்த இடத்திற்கு பட்டா வழங்கி ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் சேந்தமங்கலம், எருமப்பட்டிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.358 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 24,000 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவுள்ளது. இவ்வாறு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை முன்னுதாரணமாக கொண்டு நீங்களும் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு இந்த சமுதாயத்தை முன்னேற்றிட வேண்டும். அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கல்லூரி மாணவிகளுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துமடல்கள், 11 பயனாளிகளுக்கு ரூ.50,000/- திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம், 30 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 30 சிறந்த பெண் தொழில் முனைவோர்களுக்கு விருது, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பங்கு எடுத்து 10 சிறந்த ஊராட்சிகளுக்கு விருது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பணியாற்றிய 10 சமூக சேவகர்களுக்கு விருது, குறும்பட தயாரிப்பில் பங்கேற்ற 20 நபர்களுக்கு விருது, ஓரிகாமி என்னும் வண்ணத்தாள் அடுக்குதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.50 இலட்சம் கடனுதவி உள்ளிட்டவற்றை வழங்கினார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட தபால் கணக்கு புத்தகங்களை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி க.மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஸ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.சி.சசிகலா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்