திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் மற்றும் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில்
3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பிரிவு பகுதியில் இன்று (07.03.2024) மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்திற்கும், ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டில் மோகனூரில் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டடம், முத்துகாபட்டியில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம், ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை புதிய கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிள்ளாநல்லூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், புதுச்சத்திரம் செவிலியர் குடியிருப்பு கட்டடம், நாமக்கல் வட்டாரம், சின்னவேப்பநத்தம் புதிய துணை சுகாதார நிலையம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு கு.பொன்னுசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க, நாமக்கல் மாவட்டத்தில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் 1,17,210 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 6 தளங்களுடன், 300 படுக்கை வசதிகளுடன் மருந்தகம், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ, சி.டிஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, மகப்பேறு வார்டு, குழந்தைகள் வார்டு போன்ற பல்வேறு வசதிகளுடன் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், சாலையின் உயரத்திற்கு தரைதளத்தை உயர்த்திட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் ரூ.2.62 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்திட ரூ.3.20 கோடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்தும் வழங்க உள்ளார்கள். இதன் மூலம் இம்மருத்துவமனை தன்னிறைவு பெற்று அனைத்து வசதிகளுடன் சிறப்பாக அமையவுள்ளது. இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள், கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள். ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை புதிய கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு சித்த மருத்துவ கல்லூரி அமையவுள்ளது.
தலா ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் மோகனூரியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு, முத்துகாபட்டியில் துணை சுகாதார நிலையம் மற்றும் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை புதிய கட்டடம் என மொத்தம் ரூ.56.05 கோடி செலவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார அலகு கட்டடம், ரூ.22.75 இலட்சம் மதிப்பீட்டில் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டடம், ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் சின்ன வேப்பநத்தம் துணை சுகாதார நிலைய கட்டடம் என மொத்தம் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் 3 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் கட்டடம், தலா ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் பேளுக்குறிச்சி, எருமப்பட்டி மற்றும் நல்லூரில் பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் மோகனூர் செவிலியர் குடியிருப்பு கட்டிடம், தலா ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் கீரம்பூர், மோகனூர், திருமலைப்பட்டி, தலா ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் எட்டிமடைபுதூர், கொல்லப்பட்டி, ரூ.26.50 இலட்சம் மதிப்பீட்டில் முசிறி மற்றும் தலா ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் பொட்டணம், காளப்பநாயக்கன்பட்டி, திண்டமங்கலம், கூடச்சேரி, என்.புதுப்பட்டி என மொத்தம் ரூ.31.40 கோடி செலவில் 19 மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் குமாரபாளையம் நகராட்சி 2, நாமக்கல் நகராட்சி 2, இராசிபுரம் நகராட்சி 1, திருச்செங்கோடு நகராட்சி - 2 ஆகிய 7 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் 8 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் 8 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதார அலகுகள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு வசதிகள் கொண்ட புதிய கட்டிடம், ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி, ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், சி.டிஸ்கேன், சிஆர்ம் ஆகிய கருவிகள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ சேவைகள் ரூ.345 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் இன்றைய தினம் அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் வருகை பதிவேடு, மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருதய நோயினால் ஏற்படும் இறப்புகளை தவிர்த்திடும் வகையில் ரூ.3.37 கோடி மதிப்பில் இதயம் காப்போம் திட்டம் 27.06.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,786 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6,422 நபர்களுக்கு இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டு நலமுடன் உள்ளார்கள். அந்த வகையில் அத்தனூர் மருத்துவமனையில் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் 2 நபர்கள் காக்கப்பட்டுள்ளனர்.
இவை மட்டுமின்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், இதயம் காப்போம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டம், கலைஞரின் விடியல் பயணத்திட்டத்தில் இன்றைக்கு 50 லட்சம் மகளிர் இலவசமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் தொடங்கப்பட்ட இன்று வரை 445 கோடி பயணங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது. இத்திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ.2,500 கோடி போக்குவரத்து துறைக்கு மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நகர பகுதியில் மகளிர் மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்தி வந்த நிலையில், மலை கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயன்பெறும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகளிலும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க ரூ.3,050 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
மேலும், மக்கள் தேவைகளை தினந்தோறும் கேட்டறிந்து, சேவைகள் மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீங்கள் நலமா திட்டம் நேற்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். மக்களின் நலனை காக்க இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது,
இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் மற்றும் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு நவீன சிகிச்சை வசதிகளுடன், அனைத்து வியாதிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் இம்மருத்துவமனை அமையவுள்ளது. கர்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் நலன் காக்கும் வகையில் இம்மருத்துவமனையில் சிம்.எம்.ஒ.என்.ஏ.சி – ஓ.பி என்னும் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க முடியும். இந்தியாவில் 75 சதவிகிதம் குழந்தை இறப்பு பிறப்பின் போதும், பிறந்த பிறகும் ஏற்படுகிறது என தரவுகளில் உள்ளது. 25 சதவிகித இறப்புகள் தாயின் வயிற்றுக்குள்ளும் ஏற்படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன சிகிச்சை வசதிகளுடன் அமையவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுவரை தீர்வு காணப்படாத ஒவ்வொரு திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள்.
அதுமட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்திற்கென தனி புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். கொல்லிமலை பகுதியில் வசிக்கும் மலை வாழ் மக்களுக்கு தேவையான அவசர சிகிச்சைகள் பெற இம்மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக அமையும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைய சிறப்பாக பணியாற்றிய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இம்மருத்துவமனை ஒதுக்கீடு செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் சார்பாக எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இராசிபுரம், அணைப்பாளையம் பகுதியில் ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.இராமசுவாமி, வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் திரு.இராஜேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (வெண்ணந்தூர்) திரு.ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் (வெண்ணந்தூர்) திரு.ஆர்.எம்.துரைசாமி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.அ.ராஜ்மோகன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.க.பூங்கொடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்