நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில்
33.20 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அக்கரைப்பட்டியில், நீர்வளத்துறையின் சார்பில், ஆறுகள் மற்றும் வழங்கு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக, சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் இன்று (9.3.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் 33.20 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் வட்டம், ஏளூரில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில், 2.60 கி.மீட்டர் நீளத்திற்கு ஏளூர் ஏரியின் வழிந்தோடும் வாய்க்கால் தூர்வாரும் பணி, பரமத்திவேலூர் வட்டத்தில், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் 1.40 கி.மீட்டர் நீளத்திற்கு பிராந்தகம் மற்றும் இருட்டணை ஏரியின் வழிந்தோடும் வாய்க்கால் தூர்வாரும் பணி, சேந்தமங்கலம் வட்டம், திப்ரமாதேவி பகுதியில் புங்காத்து ஓடை ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில், 9.50 கி.மீட்டர் நீளத்திற்கு ஓடை தூர்வாரும் பணி, எருமப்பட்டியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில், 5.00 கி.மீட்டர் நீளத்திற்கு வறட்டாறு தூர்வாரும் பணி, இராசிபுரம் வட்டம், அக்கரைப்பட்டியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில், 3.50 கி.மீட்டர் நீளத்திற்கு சேமூர் பெரிய ஏரியின் வழங்கு வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் குமாரபாளையம் வட்டம், அம்மணி கிராமத்தில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில், 11.20 கி.மீட்டர் நீளத்திற்கு ஏரி தூர்வாரும் பணி என மொத்தம் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் 33.20 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ஏரிகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீரோட்டம் தங்கு தடையின்றி ஏரிகளுக்கு சென்று நீர்வரத்து அதிகரித்து நீரோட்டத்தினை முழுமையாக கொண்டு செல்ல முடியும். கரை உடைப்பு மற்றும் வெள்ள நீர் வடிதல் தடுக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட முடியும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.ஆர்.எம்.துரைசாமி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திரு.என்.ஆனந்தன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.பிரபு, திரு.விஜயக்குமார், உதவி பொறியாளர் திருமதி தீபா உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்