Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் (01.03.2024) அன்று ஆய்வு மேற்கொண்டார். 
 எருமப்பட்டி பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திப்பரமாதேவி பகுதியில் நவீன இயந்திரங்களை கொண்டு கருவேல மரங்களை அகற்றப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். 
 மேலும், வரதராஜபுரத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளின் விபரம், பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் மாணவியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் விரிவாக கேட்டறிந்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்