Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதிய நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதிய நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் இன்று (13.03.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.ராமலிங்கம் (நாமக்கல்) அவர்கள், திரு.கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்ற இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட அரசாணை வெளியிட்டார்கள்.

இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பிரிவு பகுதியில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்செங்கோடு பகுதியிலும் அரசு மருத்துவமனைக்கு இணையான கூடுதல் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.  


புதிய நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், வங்கி உருவாகிட பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகத்திற்கு எனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி கடந்த ஆண்டு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது பெற்றுள்ளது. அதே போல நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியும் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கி கூடுதல் பதிவாளர் / செயலாட்சியர் திருமதி இரா.மீராபாய், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திரு.ரமேஷ், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் திரு.எ.அசோக்குமார், திருமதி வி.பி.ராணி, திருமதி.வி.கௌரி, திருமதி ஆர்.ஜோதிலட்சுமி, திரு.எஸ்.செல்வகுமார், திரு.பி.பாலசுப்ரமணியம், திரு.பி.நவலடி, திரு.ஆர்.மாயவன், திரு.எம்.ஜி.ராஜேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்