சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் போஷன் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நகராட்சி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று (15.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் போஷன் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது :
இந்தியாவில் போஷன் பக்வாடா எனும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு கவனம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதற்காக இத்திட்டம் நிறுவப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமாக குழந்தைகள் பிறப்பதற்கு உண்டான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் அதிக மருத்துவ வசதிகள் இருந்தாலும், இன்று பிறக்க கூடிய 100 குழந்தைகளில், 20 குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், தாய்மார்களின் எடையை கர்ப்ப காலத்திலும், அதற்கு பிந்தையை காலக்கட்டத்திலும், குறிப்பாக பாலூட்டும் காலத்திலும், அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை சரியாக பராமரிப்பது இல்லை. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சத்தாண உணவை உட்கொண்டால் உடல் எடை குறைவாக குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் குறையும், கர்ப்பிணி பெண்கள் சத்தாண உணவுகளை எடுத்துக்கொள்ளாததால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. அவ்வாறு இல்லாமல் இருப்பதற்காக அரசு மருத்துவமனையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கர்ப்பிணி பெண்கள் தனது கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு எது, சத்தான உணவு எது, என ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான விழிப்புணர்வை அறிந்து கொள்வதே ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
எனவே கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் ஆலோசனையின்படி, கடைபிடித்தால் நாம் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். கர்ப்ப காலத்தில் பராமரிப்பு குறித்தும், பச்சிளம் குழந்தைகள் உணவூட்டும் முறைகளும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் வாரந்தோறும் மருத்துவ பரிசோதனைகளும், ஊட்டசத்து பெட்டகங்களும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து தாய்மார்களும் எடை குறைவில்லாத ஒரு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சி.சசிகலா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்