Hot Posts

6/recent/ticker-posts

மயான பொதுபாதையை மீட்டுத் தரக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கல்

நாமக்கல் 


மயான பொதுபாதையை மீட்டுத் தரக் கோரி நாமக்கல் 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கல்



 தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குமரவேல் தலைமையில்,
 ஊர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பு௧qqqqqqகார் மனுபெட்டியில் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.


 அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..,
 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் ஊராட்சி மற்றும் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, பழனியப்பனூரில் பட்டியல் இன மக்கள், 50-க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள் பூர்வ குடிகளாக வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயானத்திற்கு செல்லும் பாதையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு,அப்பகுதியை சேர்ந்த விவசாய நில உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுபாதையை குறிப்பாக மயான பாதையை ஆக்கிரமிப்பு செய்து பாதை முழுவதும் விவசாய நிலத்தை சேர்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

 இதன் அடிப்படையில் பல ஆண்டுகாலமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் பட்டியலின அருந்ததியர் மக்கள் அப்பாதையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அருந்ததியர் மக்கள் பூர்வ குடிகளாக வாழ்ந்து வரக்கூடிய பழனியப்பனூரில் யாரேனும் இறந்தால் அவர்களுடைய உடலை பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு மிகவும் சிரமப்பட்டு சாதியவாதிகளுக்கும், சாதி இந்துக்களுக்கும் பயந்து கொண்டு அதே வழியில் மரணித்தவர்கள் பிரதேங்களை, புதர் மண்டிய வரப்புகள் மேல் இன்று வரை எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு முதியவர் இறந்துவிட்ட நிலையில், மயான பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது .
இது குறித்து அரசுத்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 எனவே தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கடந்த 27.2.2023 ஆண்டு ராசிபுரம் வட்டாட்சியிடம் மீண்டும் புகார் மனு வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையை உள்ளது. எனவே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பட்டியலின மக்களின் நலன் கருதி மிகத் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு மயான பொதுப் பாதையை மீட்டு தர வேண்டும் என தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
 இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்