அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
நாமக்கல்
ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில், ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில்
ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காக, அருந்ததிய மக்களின் சமூக விடுதலைக்காக நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அருந்ததிய மக்கள் சாதியின் பெயரால் பல இடங்களில் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பக்கம் நின்று நியாயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான தீர்வைத் தேடி தருகிறோம். மேலும் ஆதிக்க சமூகத்தினர் காலம் முழுக்க அருந்ததி மக்களை அடிமைகளாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ஆதிக்க சமூகத்தினர் ஜாதி வெறியோடு பட்டியல் சமூகத்திற்கு உள்ள சட்ட பாதுகாப்பை நீர்த்துப் போக வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு, அருந்ததிய மக்களுக்கு துணையாக நிற்கின்ற ஆதித்தமிழர் பேரவை மீது நிர்வாகிகள் மீது உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைதளங்கள் வெளியிட்டு ,சமூக பதட்டத்தை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமாக கிடைக்கின்ற சட்டத் தேர்வு தேடித் தருகின்ற, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் மீது களங்கம் கற்பித்து சமூக ஊடகத்தின் வாயிலாக அவதூறுகளையும் விஷம பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். உன்மையில் திருச்செங்கோடு ஊரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வன்கொடுமை சம்பவத்தில் சம்பவ இடத்திற்கு செல்லாத ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறுகளையும் விமர்சனங்களையும் செய்து வீடியோ வெளியிட்ட கிளாப்பாளையம் சுரேஷ்குமார் என்பவர் தொடர்ந்து அருந்ததியர் மக்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில், சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில சமூகத்தை சேர்ந்த நபர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, அருந்ததிய மக்களுக்கு எதிராக கூட்டங்கள் நடத்தி, பட்டியல் சமூக மக்களின் சட்ட பாதுகாப்பில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து கீழ்தரமாகவும் மோசமாகவும் விமர்சித்து வருகிறார். எனவே மேற்கண்ட கிலாபாளையம் சுரேஷ்குமார் மற்றும் அவரை சார்ந்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..
0 கருத்துகள்