Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மைத்துறையின் சார்பில், பராம்பரிய இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மைத்துறையின் சார்பில், பராம்பரிய இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், பராம்பரிய இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாய பெருமக்களின் நலனை காக்கும் வகையில், விவசாயத்தின் முன்னேற்றதிற்காகவும், விவசாயத்தில் அதிக இலாபம் ஈட்டும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயத்தை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். 

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரிய வேளாண் இடுபொட்டுகளை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளுதல் ஆகும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 540 ஹெக்டர் பரப்பளவில் ரூ.48.37 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு தொகுப்பு குழுவிற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு அங்ககச் சான்று வழங்கப்படும்.

பாரம்பரிய வேளாண்மையை ஊக்குவித்திடும் வகையில், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பாரம்பரிய மற்றும் அங்கக சாகுபடி முறையில் ஆர்வம் உள்ள விவசாயிகளை தேர்வு செய்து 20 ஹெக்டர் கொண்ட குழுக்களை அமைத்தல், இதில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அதிகபட்சம் 2 ஹெக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. தேர்வு செய்த விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கண்டுனர் சுற்றுலா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலம் அளிக்கப்படுகிறது. குழுவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா ரூ.12,000/-ஹெக்டர் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. குழுக்களின் செயல்படுகளை விதைச் சான்று துறை மற்றும் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அங்கக சான்று பெறும்வரை தொகுப்பு குழுக்கள் வழிநடத்தப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி கொண்டு அதிகளவில் விவசாயம் செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 
 முன்னதாக பாரம்பரிய வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
 இந்நிகழ்ச்சியல் வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.இராமசந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகள் மற்றும் விற்பனைத் துறை) முனவைர்.அ.நாசர் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்