Hot Posts

6/recent/ticker-posts

பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் எங்களை தயார்படுத்தி கொள்ள வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில்,அரசுப்பணியில் சேரவுள்ளவர்கள் நெஞ்சார்ந்த நன்றி.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் எங்களை தயார்படுத்தி கொள்ள வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு 
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பயிற்சி பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேரவுள்ளவர்கள் நெஞ்சார்ந்த நன்றி.

 நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரவுள்ளவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி அரசுப்பணியில் சேரவுள்ள பி.மஞ்சு அவர்களின் 
தாயார் திருமதி.பா.காமாட்சி அவர்கள் தெரிவித்ததாவது,

என் பெயர் காமாட்சி. நாங்கள் நாமக்கல் மாவட்டம், மட்டப்பாறை புதூரில் வசித்து வருகிறோம். என் மகள் பெயர் மஞ்சு. அவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளை எழுதி வந்தார். தனியார் பயிற்சி வகுப்புகளை செல்ல போதிய வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசின் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவசமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி பணியில் சேர உள்ளார். இத்தகைய ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 

காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி அரசுப்பணியில் சேரவுள்ள செல்வி.எஸ்.எம்.ரகிமுன்னிசா அவர்கள் தெரிவித்ததாவது,

என் பெயர் ரகிமுன்னிசா. நாங்கள் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் வசித்து வருகிறோம். நான் படித்து முடித்து விட்டு, அரசு தேர்வுகளுக்கு படித்து வந்தேன். தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்கும் அளவிற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் தான் படித்தேன். அங்கு எனக்கு இலவசமாக தேர்விற்கான புத்தகங்களை வழங்கினார்கள். மேலும் அதிக அளவில் பயிற்சி தேர்வுகளையும் வைத்தார்கள். இதன் மூலம் என்னால் நன்கு படிக்க முடிந்தது. நான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தேர்வாகி உள்ளேன். மேலும், தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி, பணியில் சேர உள்ளேன். இவ்வாறு ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் அரசு பணி கனவை நினைவாக்கும் வகையில் இலவச பயிற்சிகள் வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் நிலைய அலுவலராக தேர்வாகி அரசுப்பணியில் சேரவுள்ள செல்வன் .எம்.சேனாதிபதி அவர்கள் தெரிவித்ததாவது,

என் பெயர் சேனாதிபதி. நான் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் வசித்து வருகிறேன். என் பெற்றோர் தினசரி கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். எனது பெற்றோருக்கு என்னை அரசு பணியாளராக உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர்களால் என்னை தனியார் பயிற்சி மையங்களில் சேர்த்து படிக்க வைக்க போதிய வசதி இல்லை. என் தந்தை என்னை நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பிற்கு சென்று படிக்க சொன்னார். நானும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படித்து வந்தேன். பயிற்சி மையத்தில் வழங்கப்படும் தேர்விற்கான பயிற்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமின்றி பல்வேறு பயிற்சி தேர்வுகளும் வைத்து பயிற்சி வழங்கினார்கள். இப்பயிற்சிகாளல் நான் தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் நிலைய அலுவலராக தேர்வாகி உள்ளேன். நான் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றத்தால் என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். என்னை போன்ற போதிய வசதி இல்லாத இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இலவச பயிற்சி வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 
காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி அரசுப்பணியில் சேரவுள்ள செல்வன் மு.லோகேஷ் அவர்கள் தெரிவித்ததாவது,

என் பெயர் லோகேஸ். நாங்கள் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் வசித்து வருகிறோம். என் தந்தை லாரி ஓட்டுநர். நான் படித்து முடித்து விட்டு, வீட்டிலேயே அரசு தேர்விற்கு பயின்று வந்தேன். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் உதவி ஆய்வாளர் தேர்விற்கு பயின்று வந்தேன். இப்போது, தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி உள்ளேன். என்னை போன்ற இளைஞர்களுக்கு சிறப்பாக பயிற்சி வழங்கி, பொதுமக்களுக்கு சேவை செய்திட எங்களை தயார்படுத்தி கொள்ள வாய்ப்புகளை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 
காவல் உதவி ஆய்வாளராக தேர்வாகி அரசுப்பணியில் சேரவுள்ள செல்வி. ஜெ.சிவரஞ்சினி அவர்கள் தெரிவித்ததாவது,


 என் பெயர் சிவரஞ்சனி. நாங்கள் நாமக்கல் மாவட்டம், மருவூர்பட்டியில் வசித்து வருகிறோம். என் தந்தை எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள். நான் எம்.எஸ்.சி பட்ட படிப்பு முடித்து விட்டு 2019 முதல் அரசு பணிக்கு பயின்று வருகிறேன். நான் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தேன். தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் காவல் உதவி ஆய்வாளர் தேர்விற்கு பயின்று தேர்ச்சி பெற்று, உடற்தகுதி தேர்விற்கும் பயிற்சிகள் பெற்று, சென்னையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்