நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (4.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் தலைமையில் தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட் பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தேர்தல் நாள் 19.4.2024 அன்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் அழைப்பிதழ்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கி, கடைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), வட்டாட்சியர் திரு.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்