Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 2023 – 2024 –ல் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய மற்றும் இடை நிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 2023 – 2024 –ல் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய மற்றும் 
இடை நிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் இன்று (30.4.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 2023- 2024ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் திட்ட கூறின் கீழ் நாளாது வரையில் 126 மாணவர்களுக்கும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 45 மாணவர்கள் விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வரவில்லை. மேற்படி விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுப்படுத்துனர் மூலமாக ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட்டார கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுநர்களின் பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான பணி முன்னேற்ற அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. 

எனவே, அனைத்து அலுவலர்களும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கி குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் வரவழைக்க அனைத்து பணிகளையும் தோய்வின்றி சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்