Hot Posts

6/recent/ticker-posts

மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 2,786 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 
2,786 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2,786 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 174 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களை நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளில் 65 சதவிகிதமான 1,060 வாக்குச்சாவடிகளில் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.


மேலும் தேர்தல் நாள் 19.4.2024 அன்று வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2,786 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் ஜார்கண்ட், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1,080 காவலர்கள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1,208 காவலர்கள், 250 ஊர் காவல் படையினர், 140 முன்னாள் படை வீரர்கள், 16 பிற சீருடை பணியாளர்கள், 18 மத்திய ஆயுத காவல் படையினர், 28 வனத்துறையினர், 
46 ஓய்வு பெற்ற காவல் துறையினர் என மொத்தம் 2,786 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


நாளை 19.4.2024 நடைபெறவுள்ள வாக்கு பதிவின் போது பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்டம் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்