Hot Posts

6/recent/ticker-posts

மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான 34 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக அனுப்ப தயார் நிலையில் உள்ளன. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாள்:16.4.2024
மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான 34 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக அனுப்ப தயார் நிலையில் உள்ளன. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

 நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.4.2024) மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,628 வாக்குச்சாவடிகளில் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units). கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units) மற்றும் வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATS) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் 
(First Randomization) ஒதுக்கீடு செய்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு அதற்குரிய பாதுகாப்பு அறையில் (STRONG ROOM) காவல் துறை பாதுகாப்புடன் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 

அதன் தொடர்சியாக, இன்றைய தினம் வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் தகவல் பலகை, அழியாத மை, முத்திரைகள், ஊதா நிற ஸ்டெம்ப் பேடு, பேனா, பென்சில், A4 தாள்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நூல், கார்பன் பேப்பர், ரப்பர் பேன்டு, டேப், பேக்கிங் சீட், பிளேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது நாமக்கல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்