Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று (3.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தலை -2024யையொட்டி நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் 
திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பா.ம.இமயவரம்பன், உதவி இயக்குநர், நில அளவை இரா.ஜெயசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.அ.தவமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்