Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 3 இலட்சம் நபர்களுக்கு தேர்தல் நாள் அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனை. மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 3 இலட்சம் நபர்களுக்கு தேர்தல் நாள் அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனை. மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் நகராட்சி, பூங்கா சாலை, ஆவின் பால் விற்பனை நிலையத்தில் இன்று (17.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் நாள் அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அதனடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாள்தோறும் இன்று முதல் 3 இலட்சம் நபர்களுக்கு சென்றடையும் வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் நாள் அச்சிடப்பட்டு சுமார் 1.50 லட்சம் குடும்பங்களை சென்றடையும் வகையில் விற்பனையை தொடங்கி வைத்தார்.
487 கிராமங்களில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்களை சென்றடையும் வகையில் அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள், ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகம் போன்ற இடங்களில் துண்டு பிரசுரங்களாகவும், ஒட்டு வில்லைகளாகவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1.50 இலட்சம் குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும், சுமார் 13,500 கிராமப்புற குடும்பங்களையும் சென்றடையும் வகையில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு 17.4.2024, 18.4.2024 மற்றும் 19.4.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பணிகளில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ஆர்.சண்முகம், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்