நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்களவை
பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு, வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.3.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி ஹர்குன்ஜித்கௌர், இ.ஆ.ப., தேர்தல் செலவின பார்வையாளர் திரு.அர்ஜூன் பேனர்ஜி, இ.வ.ப., ஆகியோர் முன்னிலையில் மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு, வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு செலவின பதிவேடு பராமரிப்பது, வேட்பாளர் ஒருவருக்கு உச்ச வரம்பு ரூ.95.00 இலட்சம் மட்டும் செலவு மேற்கொள்ளுதல், 3.4.2024, 10.4.2024 மற்றும் 16.4.2024 தேதிகளில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவினப் பதிவேட்டை தேர்தல் செலவினப் பார்வையாளரின் ஆய்வுக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மனுத்தாக்கல் செய்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலான அனைத்து செலவுகளும், தகுந்த ஆதாரங்களுடன் முடிவான கணக்கு இருக்க வேண்டும். அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 22 பேர் கலந்து கொண்டனர்.
// இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.கே.மோகன்தாஸ், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்