மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தனூர், கட்டனாச்சம்பட்டி, வடுகம் மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (1.4.2024) பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 687 வாக்குபதிவு மையங்களில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 22.01.2024- தேதியின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 6,93,728 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 7,38,383, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 196 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 14,32,307 உள்ளனர்.
மேற்படி அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 53 வாக்குப்பதிவு மையங்களில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குப்பதிவு மையங்களில் 19 வாக்குச்சாவடிகள், 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குப்பதிவு மையங்களில் 29 வாக்குச்சாவடிகள், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 5 வாக்குப்பதிவு மையங்களில் 18 வாக்குச்சாவடிகள், 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு மையங்களில் 26 வாக்குச்சாவடிகள், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குப்பதிவு மையங்களில் 33 வாக்குச்சாவடிகள், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 9 வாக்குப்பதிவு மையங்களில் 49 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 53 வாக்கு பதிவு மையங்களில் உள்ள 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்