மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு முஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னப்பாவடி நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் ஔவை கல்வி நிலையம் நடுநிலைப்பள்ளிகளில் இன்று (1.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 687 வாக்குபதிவு மையங்களில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 53 வாக்குப்பதிவு மையங்களில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குப்பதிவு மையங்களில் 19 வாக்குச்சாவடிகள், 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குப்பதிவு மையங்களில் 29 வாக்குச்சாவடிகள், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 5 வாக்குப்பதிவு மையங்களில் 18 வாக்குச்சாவடிகள், 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு மையங்களில் 26 வாக்குச்சாவடிகள், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குப்பதிவு மையங்களில் 33 வாக்குச்சாவடிகள், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 9 வாக்குப்பதிவு மையங்களில் 49 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 53 வாக்கு பதிவு மையங்களில் உள்ள 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் கேமரா பொறுத்தப்பட்டு இணையதள மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மத்திய இராணுவ படை வீரர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்தல் நாளான்று பணியமர்த்தபடுவார்கள்.
தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), திருச்செங்கோடு வட்டாட்சியர் திரு.விஜய்காந்த், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் திரு.இரா.சேகர், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்