Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (15.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி ஹர்குன்ஜித்கௌர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 14,32,307 வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை திரு.கி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்