நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.பொ.கணேசன் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் இன்று (30.4.2024) மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.பொ.கணேசன் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.பொ.கணேசன் அவர்கள் 01.10.1993 பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணியாற்றி 12.01.2006 அன்று முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 02.08.2010 அன்று தலைமையாசிரியராகவும், 24.02.2021 அன்று மாவட்ட கல்வி அலுவலராகவும் கல்வி உயர்வு பெற்றார். சேலம் (ஆத்தூர்), அரியலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி 01.10.2022 முதல் இன்று (30.01.2024) வரை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) பணியாற்றி உள்ளார். இவர் பணி காலத்தில் அப்பலுக்கற்ற சிறப்பாக பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். இவரது மொத்த பணி காலம் 30 வருடம் 07 மாதங்கள் ஆகும்.
30 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.பொ.கணேசன் அவர்கள் பணி ஓய்வு பெறுவதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பணி ஓய்வு பெறும் திரு.பொ.கணேசன் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், பணி ஓய்வு காலங்களில் ஆரோக்கியத்துடன் வாழவும், தொடர்ந்து கல்வி துறையில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி சேவை ஆற்றவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகள் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்