மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுரை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (17.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.ராஜேஸ்கண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 137 வாகனங்களில் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது,
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் – 2024-ல் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்த இறுதி 48 மணி நேரம் என்பது மிகவும் முக்கியமான கால கட்டம். அனைத்து பணியாளர்களுக்கு தங்களது பணிகளை செவ்வனே செய்திட வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில், எவ்வித அரசியல் சார்பும் இன்றி நடுநிலையோடு பணியாற்றிட வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் பதற்றம் இல்லாத, அமைதியான, பாதுகாப்பான மக்களவைத் தேர்தல் நடத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள எனது வாழ்த்துக்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இப்பணிகளுக்காக நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 137 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்தும் பணி இன்றைய தினம் நடைபெற்றது. மேலும், வாகன பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் நிலையில் 137 நபர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்