Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாள்:10.5.2024 
 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, கார்கூடல்பட்டி மற்றும் ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (10.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
ரூ.40.81 இலட்சம் மதிப்பீட்டில் சிவா நகர் பேருந்து நிலையம் முதல் பெருமாள் மலை அடிவாரம் வரை 0.775 கி.மீ தொலைவிற்கு தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும், 2 எண்ணிக்கையில் சிறுபாலங்கள் மற்றும் 
86 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரியின் பழங்குடியினர் இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பயனாளிகளின் வீட்டையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஒடுவன்குறிச்சி ஊராட்சியில் ரூ.97.66 இலட்சம் மதிப்பீட்டில் ஒடுவன்குறிச்சி முதல் ஜேடர்பாளையம் சாலை வழியாக பெருமாள் கவுண்டம்பாளையம் வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்