நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மாணவர்களுக்கான சான்றுகளை பள்ளியிலேயே விண்ணப்பிக்க நடைபெற்று வரும்
இ-சேவை மையம் முகாமை பார்வையிட்டு ஆய்வு.
நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (24.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் பொருட்டு அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வருமான, இருப்பிட, சாதி மற்றும் முதல்பட்டதாரி சான்றுகளை விண்ணப்பிக்க இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 6.5.2024 அன்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 10.5.2024 அன்றும் மற்றும் 11 – ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 14.5.2024 அன்றும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு எதிர்வரும் கல்வியாண்டு 2024-25 விரைவில் தொடங்கவுள்ளதால் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் பொருட்டு உயர்கல்வி பயில தேவையான வருமான, இருப்பிட, சாதி மற்றும் முதல்பட்டதாரி உள்ளிட்ட சான்றுகளை பெற ஏதுவாக அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இ-சேவை மையம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள் வருமான, இருப்பிட, சாதி மற்றும் முதல்பட்டதாரி சான்றுகளை விண்ணப்பிக்க ஏதுவாக சேந்தமங்கலம் வட்டம், பழையபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வட்டம், கோனூர், அரசு மேல்நிலைப்பள்ளி, மோகனூர் வட்டம், என். புதுப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் வட்டம், சோளசிராமணி, அரசு மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம், எஸ்.எஸ். சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், சித்தாளந்தூர், அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர் பந்தல் பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் வட்டம், காவக்காரன்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 பள்ளிகளில் இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்முகாம்களை அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு தேவையான சான்றுதழ்களை விண்ணப்பித்து பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும்
இ-சேவை மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், நாமக்கல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்.
0 கருத்துகள்