பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (27.05.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்
ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய மணலியில் முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2022-2023 –ன் கீழ், ரூ.37.00 இலட்சம் மதிப்பீட்டில் குஞ்சம்பாளையம் முதல் பள்ளக்காடு வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பெரிய மணலியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதியதாக சமுதாய கூடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
0 கருத்துகள்