நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் இன்று (9.6.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வு இன்று (9.6.2024) காலை 9.30 க்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு கூடங்களில் 51,433 தேர்வர்கள் போட்டி தேர்வு எழுதுகின்றனர். மேலும், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வினை 41,278 தேர்வர்கள் எழுதி உள்ளார்கள். 10,137 தேர்வர்கள் தேர்விற்கு வருகைபுரியவில்லை.
0 கருத்துகள்