Hot Posts

6/recent/ticker-posts

நாள்:09.06.2024 பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.

நாள்:09.06.2024 
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (9.6.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கொத்தம்பாளையம் மற்றும் சீதக்காடு பகுதி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம். அகரம் ஊராட்சி சுமார் 8,140 மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும். இங்குள்ள கொத்தம்பாளையம் மற்றும் சீதக்காடு பகுதிகளை சேர்ந்த சுமார் 55 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கொத்தம்பாளையம், சித்தக்காடு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு. காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கொத்தம்பாளையத்தில் இருந்த தரைப்பாலம் மேம்பாலமாக மாற்றி கட்டப்பட்ட நிலையில், பாலத்திற்கு கீழ்புறமாக பழைய பாலத்தை ஒட்டி, திருமணிமுத்தாற்றின் குறுக்கே சுமார் 500 மீட்டர் அளவிற்கு பைப்லைன் அமைத்து, அப்பகுதிக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இரும்பு பைப்புகள் துருப்பிடித்து அடிக்கடி உடைந்து விடுகிறது என்று இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு திருமணிமுத்தாறு குறுக்கே நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதையும், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்திட கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 தொடர்ந்து, கொத்தம்பாளையம் மற்றும் சீதக்காடு பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டார்.
  
 இந்த ஆய்வுகளில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்