நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள்
தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த பெண் தலைமைக் காவலர் அமுதா
அவர்களது குடும்பத்தாருக்கு கருணைத் தொகையாக ரூ.20.00 இலட்சம்
காசோலையை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டியில் இன்று (19.6.2024) தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த பெண் தலைமைக் காவலர் அமுதா அவரது குடும்பத்தாருக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி, கருணைத் தொகை ரூ.15.00 இலட்சம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப நலநிதி ரூ.5.00 இலட்சம் என மொத்தம் ரூ.20.00 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-க்காக அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 01.05.2024 அன்று இரவு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் திருமதி அமுதா அவர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து, பெண் தலைமைக் காவலர் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக இராசிபுரம் அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மெட்டாலாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி, சாலை விபத்தில் இறந்த பெண் தலைமைக் காவலர் திருமதி அமுதா (லேட்) அவர்களது குடும்பத்தினருக்கு கருணைத்தொகையாக ரூ.15.00 இலட்சம் (ரூபாய் பதினைந்து இலட்சம்) வழங்கிட தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டியில் தேர்தல் பணியின் போது இறந்ததற்கு பெண் தலைமைக் காவலர் அமுதா அவர்களது குடும்பத்தினராகிய கணவர் திரு.செல்வம் மற்றும் மாமியார் திருமதி மணி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.06.2024) நேரடியாக அவர்களது இல்லத்திற்கு சென்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15.00 இலட்சம் (ரூபாய் பதினைந்து இலட்சம்) மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப நலநிதி ரூ.5.00 இலட்சம் (ரூபாய் ஐந்து இலட்சம்) என மொத்தம் ரூ.20.00 இலட்சம் (ரூபாய் இருபது இலட்சம்) க்கான காசோலையை வழங்கினார். மேலும், அவர்களது குடும்பதாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கா.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்