தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கான விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில், 13.6.2024 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 1.10.2022 முதல் 30.9.2023 வரையிலான காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தமைக்காக தேசிய அளவில் 293.14 புள்ளிகள் பெற்ற நாமக்கல் மாவட்டம் 4–ஆம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டதற்கான விருதினை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் 322 ஊராட்சிகளுக்குட்பட்ட 2,520 குக்கிராமங்களுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் (JJM 2020-21 & New MVS) மற்றும் ஒருங்கிணைத்த 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 3,52,086 வீடுகளில் இதுவரை 3,47,996 (98.84 சதவீதம்) வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,090 வீடுகளுக்கும் 30.06.2024-க்குள் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் 01.10.2022 முதல் 30.09.2023 வரை 3,28,159 வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு தற்போது உள்ள 4,444 மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 380 தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் ஊராட்சியின் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மற்றும் 14 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாகவும், கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மூலமாகவும், குடிநீர் பெற்று குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களால் குடிநீர் கள பரிசோதனை (Field Test Kit) செய்யப்பட்டு தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் (55 LPCD) என்ற அளவில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 98 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்குழு (14th, 15th CFC) திட்டத்தில் 418 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான பணிகள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 441 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் கட்டுதல் பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக தேசிய அளவில் 4 -வது தர வரிசை விருது நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நாமக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
0 கருத்துகள்