Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
"பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இன்று (11.6.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு ஆய்விற்காக வருகை தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

தொடர்ந்து, ஆதார் பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதுமையான திட்டங்களை வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயல ஏதுவாக கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் பயனாளர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நேரடி பயனாளர் பரிமாற்றம் செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
நாமக்கல் மாவட்டத்தில் 17 பள்ளிகளில் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் ஆதார் எண் இல்லாத 4,772 மாணவ, மாணவியர்கள் மற்றும் புதுப்பித்தல் தேவை உள்ள 50,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. 
இன்றைய தினம் பெரிய மணலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொல்லிமலை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி, குருக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, களங்காணி ஆதிதிராவிடர் நல பள்ளி, இராசிபுரம், வி.நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 17 பள்ளிகளில் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெறுகிறது.
இந்த ஆய்வில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்