Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் கொல்லிமலை வல்வில் ஓரி 2024 விழா நடைபெறுவதை முன்னிட்டு, கொல்லிமலைக்கு செல்லும் பாதையை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் கொல்லிமலை வல்வில் ஓரி 2024 விழா நடைபெறுவதை முன்னிட்டு, கொல்லிமலைக்கு செல்லும் பாதையை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளி மலை அடிவார பகுதியில் இன்று (30.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் இடம், கொல்லிமலை செல்லும் பாதை ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். 
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 
17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் கொல்லிமலையில் 02.08.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 03.08.2024 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் வல்வில் ஓரி விழா – 2024 தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.
இந்த ஆண்டு கொல்லிமலையில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழா பசுமை திருவிழாவாக மிகச்சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதன்படி, நெகிழி பயன்பாட்டினை தவிர்க்கும்பொருட்டும், துணி பைகள் பயன்படுத்துவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் இடம், கொல்லிமலை செல்லும் பாதை ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்ச பைகளை வழங்கினார். இத்தூய்மை பணிகளில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

         கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டுவரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை கொண்டுவர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நெகிழி குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். எனவே கடை உரிமையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
     
இந்நிகழ்வுகளில் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ரகுநாதன் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேஸ்கண்ணன், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்